Primary tabs
- 4.5 தொகுப்புரை
உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொண்டீர்கள். தமிழில் உள்ள உடம்படுமெய்கள் யாவை என்பதை அறிந்து கொண்டீர்கள். அவை இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையே தோன்றும் விட்டிசையைத் தடுக்கும் இயல்பு உடையனவாய்த் திகழும் சிறப்பை அறிந்து கொண்டீர்கள். உடம்படுமெய் ஒலிகள் சொற்களின் புணர்ச்சியில் வரும் சூழலுக்கான விதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் பற்றிக் கூறிய கருத்தை விளக்கமாக அறிந்துகொண்டீர்கள். அவர் காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் சில சொற்கள் வழங்கியமையை அறிந்துகொண்டீர்கள். சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழலை நன்றாகத் தெரிந்துகொண்டீர்கள். இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல் பற்றி நன்னூல் தெரிவிக்கும் விதிகளை அறிந்துகொண்டீர்கள். தற்காலத்தில் அகச்சந்தியிலும், புறச்சந்தியிலும் உடம்படுமெய் ஒலிகள் வருகின்ற முறை பற்றியும் விளக்கமாக அறிந்துகொண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II2.கோயில், கோவில் ஆகிய சொற்களில் நன்னூலார் விதிப்படி அமைந்த சொல் யாது? அதில் உள்ள உடம்படுமெய் ஒலி யாது?