தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- மெய் ஒலிகள்

  • பாடம் - 3

    D05143 மெய் ஒலிகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

         இப்பாடமானது மெய் ஒலிகள் என்றால் என்ன என்பது பற்றியும், அவை எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பது பற்றியும் விளக்குகிறது. அதோடு தொல்காப்பியர் போன்ற இலக்கண நூலார் எவ்வாறு இன்றைய மொழியியலார் சிந்தனையோடு ஒத்துச் சென்றுள்ளனர் என்பது பற்றியும் விளக்குகிறது. குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடை ஒலி (voiced sound) என்பன பற்றி விளக்குகிறது. மொழியியலார் மெய் ஒலிகளை ஒலிக்கருவிகள் அடிப்படையிலும், ஒலிப்புமுறை அடிப்படையிலும் பாகுபடுத்திக் கூறுவனவற்றை விளக்கிக் காட்டுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • மெய் ஒலிகள் எங்கு, எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • மெய் ஒலிகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பது பற்றியும், அவை எங்கெங்கு எம்மாதிரியான ஒலி உறுப்புகளின் உதவியுடன் பிறக்கின்றன என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    • குரல் உடை ஒலியும், குரல் இலா ஒலியும் சொல்லில் எம்மாதிரியான இடங்களில் அமைந்து வருகின்றன என்பது பற்றிச் சான்றுகளுடன் விளங்கிக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு மெய்ஒலியின் பிறப்பு முறை அல்லது ஒலிப்பு முறை பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

    • மெய் ஒலிகளின் பாகுபாட்டில் பழந்தமிழ் இலக்கண நூலாருக்கும், இன்றைய மொழியியலாருக்கும் சற்று வேறுபாடு காணப்படுவது பற்றி அறிந்துகொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:32:31(இந்திய நேரம்)