தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- கிளை மொழிகளில் ஒலி மாற்றம்

  • பாடம் - 6

    D04146 கிளைமொழிகளில் ஒலி மாற்றம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

              கிளைமொழிகளில் உள்ள ஒலி மாற்றங்களைப் பற்றி விளக்குகிறது. பழங்காலத்தில் இலக்கண நூலாரும், தற்காலத்தில் மொழியியலாரும் செய்துள்ள கிளைமொழிப் பாகுபாட்டை விளக்குகிறது.     சங்க     காலத்திலும், இடைக்காலத்திலும் வழங்கிய கிளைமொழிகளில் நிகழ்ந்த ஒலி மாற்றங்களை அவ்வக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள், இலக்கண உரைகள், கல்வெட்டுகள் துணைகொண்டு விளக்குகிறது. தற்காலத் தமிழில் வட்டாரம், சமூகம், தொழில் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, கிளைமொழிகளில் ஏற்பட்டுள்ள ஒலிமாற்றங்கள் பற்றி     மொழியியலார் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • கிளைமொழி என்றால் என்ன என்பதைச் சான்றுடன் விளக்கிக் காட்டலாம்.

    • கிளைமொழி என்பதைத் தொல்காப்பியர் திசைச்சொல் என்று குறிப்பிட்டு விளக்குவதை அறியலாம்.

    • தமிழ்நாட்டில் பழங்காலத்தே கிளைமொழிகள் வழங்கிய வட்டாரங்களையும்,     அவற்றில்     வழங்கிய கிளைமொழிகளையும் அறிந்து கொள்ளலாம்.

    • இடைக்காலத்தில்     கிளைமொழிகள்     வழங்கிய வட்டாரங்கள் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம்.

    • இடைக்காலத்தில் கிளைமொழிகளில் நிகழ்ந்த ஒலி மாற்றங்களைச் சான்றுகளுடன் தெரிந்துகொள்ளலாம்.

    • தற்காலத் தமிழில் கிளைமொழிகளை மொழியியலார் எவ்வாறு பாகுபடுத்திக் காட்டுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.

    • தற்காலத் தமிழில் வட்டாரக் கிளைமொழிகளிலும், சமூகக் கிளைமொழிகளிலும் உள்ள ஒலி மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:37:51(இந்திய நேரம்)