Primary tabs
-
6.6 தொகுப்புரை
இப்பாடத்தில் கிளைமொழி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தைச் சான்றுகளுடன் அறிந்துகொண்டீர்கள். பழந்தமிழ் இலக்கணநூலாரும், தற்கால மொழியியலாரும் செய்துள்ள கிளைமொழிப் பாகுபாட்டைத் தெரிந்து கொண்டீர்கள். பழங்காலத்திலும், இடைக்காலத்திலும் கிளைமொழி வழங்கிய இடங்கள், அவ்விடங்களில் வழங்கிய கிளைமொழிகள் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். தற்காலத்தில் மொழியியலார் தமிழில் வழங்கும் கிளைமொழிகளை வட்டாரம், சமூகநிலை போன்றவற்றை வைத்து எவ்வாறெல்லாம் வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II2.இடைக்காலத்தில் கிளைமொழிகள் பரவியிருந்த வட்டாரங்களாக வீரசோழிய உரை குறிப்பிடுவன எத்தனை? அவை யாவை?