Primary tabs
-
2.0 பாட முன்னுரை
இலக்கியப் படைப்புகளின் தன்மைகளும், அவற்றின் பல்வேறு உத்திகளும், மற்றும் உள்ளடக்கக் கூறுகளும் எவ்வாறு அமைந்துள்ளன என்று கூற வேண்டுவது திறனாய்வின் பண்பு ஆகும். இலக்கியத்தின் காலம், இடம் என்ற பரிமாணங்களின் இடைவெளியை நிரப்பிப் புரிந்து கொள்ளுதலுக்குத் திறனாய்வு துணை நிற்கிறது. மேலும் திறனாய்வு, இலக்கியத்தை விளக்குகிறது; மதிப்பீடு செய்கிறது. இத்தகைய திறனாய்வு பலவகையான வழிமுறைகளையும் செய்முறைகளையும் கொண்டது. திறனாய்வுக்கு அணுகுமுறைகள் இன்றியமையாதன என்பது போல, திறனாய்வு செய்கிற வழி முறைகளும் முக்கியமாக உள்ளன. சென்ற பாடத்தைத் தொடர்ந்து இப்பாடத்தில் திறனாய்வின் ஏனைய நான்கு வகைகளைக் காண்போம்.