தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகள்

  • பாடம் - 4

    p10314 கவிமணி தேசிகவிநாயகத்தின்
    கவிதைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    கவிமணி தேசிக விநாயகம், “உள்ளத்து உள்ளது கவிதை; இன்பம் உருவெடுப்பது கவிதை” என்ற பாடலைக் கவிதைக்கு இலக்கணமாகத் தந்தவர். குழந்தைகளுக்காகப் பாடியவர். தமிழ் மொழிப் பற்றாளர். கவிதை எழுதுவதில் வல்லவர். இறையுணர்வு மிக்கவர். சாதி, மத பேதங்களைச் சாடியவர். காந்தியச் சிந்தனையாளர். தேசவுணர்வுடையவர். அவர் கவிதைகள் வழியாக அவரது கவிதை உள்ளத்தைக் காணலாம். இதுவே இந்தப் பாடத்தின் நோக்கம்.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
    •  
    கவிதைகள் பற்றிய கவிமணியின் கருத்தை அறியலாம்.
    •  
    குழந்தைகளுக்காக அவர் பாடிய பாடல்கள் அவரைக் குழந்தையாகக் காட்டுவதை உணரலாம்.
    •  
    குழந்தைகளுக்குச் சமுதாயம் பற்றி விழிப்புணர்வூட்டலாம்.
    •  
    மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணரலாம்.
    •  
    கவிமணியின் நாட்டுப்பற்று, காந்தியச் சிந்தனை மீது அவருக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை அறிந்து
    கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:10:18(இந்திய நேரம்)