Primary tabs
- பாடம் - 3p10433 - புறத்திணைப் பாகுபாடுஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?புறத்திணை என்பது என்ன எனச் சொல்கிறது. புறத்திணைகளும் அகத்திணைகளும் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்கிறது. புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி விளக்குகிறது. புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும் விளக்குகிறது. புறத்திணைப் பாகுபாடுகளால் அறியப்படும் சமூகம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?புறத்திணைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காதலும் வீரமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புற்று விளங்கின என்பதை அறியலாம்.சங்க காலப் போர் முறைகளையும், அவற்றில் இருந்த ஒழுங்கமைப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.சங்க காலச் சமுதாயத்தில் புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.