Primary tabs
-
பாடம் - 6
p10436 - பதிற்றுப்பத்து - ஓர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தை அறிமுகப்படுத்துகிறது.
பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்கள் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது என்பதைக் கூறுகிறது.
பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை விளக்குகிறது.
சேர மன்னர்களின் பண்பு நலன்களை விவரிக்கிறது. அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இவற்றைப் பாடிய புலவர்களின் நிலையினை விளக்குகிறது. உவமை முதலான இலக்கிய நலங்களைக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?பண்டைத் தமிழ் வரலாற்றில் சேர மன்னர் வரலாற்றினை இலக்கிய அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.சேர மன்னரது ஆட்சி, வீரம், படை, கொடைத் திறம், சமுதாயம், பண்பாடு பற்றி உணரலாம்.புலவர்களின் வாழ்க்கை நிலை பற்றியும், பாணர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்களின் வாழ்க்கை நிலை பற்றியும் அறியலாம்.