Primary tabs
-
6.1 எட்டுத்தொகையில் பதிற்றுப்பத்து பெறுமிடம்
எட்டுத் தொகையில் காணப்படும் நூல்களுள் பதிற்றுப்பத்து நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதை எட்டுத்தொகை பற்றிய வெண்பா கூறும்.
இந்நூல்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றியன. புறநானூறு சங்க கால வரலாற்றை அறிய உதவுவது. பதிற்றுப்பத்து சங்க காலச் சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் அறிய உதவுகிறது. இசை வகுக்கப்பட்ட புறநூல் இது ஒன்று மட்டுமே. இந்த இரண்டு புறப்பாடல்களைத் தவிர, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பாடல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்தது.
பத்துப் பத்து என்பது பதிற்றுப்பத்து என ஆயிற்று. பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. ஆக இது நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும்.
பதிற்றுப்பத்து பத்து அரசர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி என்றாலும் கால வெள்ளத்தில் முதற்பத்தும், இறுதிப் பத்தும் அழிந்துபட்டன. தமிழுலகிற்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து முடியவுள்ள எட்டுப் பத்துக்களே. முதற்பத்தையும், பத்தாம் பத்தினையும் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும், புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன.
பத்துபாடிய புலவர்பாடப்பெற்ற அரசன்
முதற்பத்து--
இரண்டாம் பத்துகுமட்டூர்க்
கண்ணனார்இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனமூன்றாம் பத்துபாலைக்
கௌதமனார்பல்யானைச்
செல்கெழு குட்டுவன்நான்காம் பத்துகாப்பியாற்றுக்
காப்பியனார்களங்காய்க் கண்ணி
நார்முடிச் சேரல்ஐந்தாம் பத்துபரணர்கடல் பிறக்கோட்டிய
செங்குட்டுவன்ஆறாம் பத்துகாக்கைபாடினியார்
நச்செள்ளையார்ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன்ஏழாம் பத்துகபிலர்செல்வக் கடுங்கோ வாழியாதன்
எட்டாம் பத்துஅரிசில்கிழார்தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறைஒன்பதாம் பத்துபெருங்குன்றூர்
கிழார்குடக்கோ இளஞ்சேரல்
இரும்பொறைபத்தாம் பத்து--