தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதிற்றுப்பத்து கூறும் சமூகச் செய்திகள்

  • 6.8 பதிற்றுப்பத்துக் கூறும் சமூகச் செய்திகள்
    பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைக் கூறும் இலக்கியம் என்பதால் இதன் மூலம் சேர மன்னர்களின் ஆட்சிக் காலச் சமூகச் செய்திகளை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம்.

    அரசனே அனைத்து அதிகாரமும் கொண்டவனாக விளங்கினான். மக்கள் அரசனைத் தெய்வத்திற்கு இணையாகக் கருதினர்.

    வீரமுடைய அரசர்கள் வள்ளல் தன்மை உடையவர்களாகவும் விளங்கினர்.

    கடற்போரில் வல்லவர்களாக அரசர்கள் இருந்தனர்.

    தம் நாட்டில் இரவலர் இன்மையால், பிற நாட்டில் சென்று இரவலரைக் கொணர்ந்து அவர்களுக்கு வாரி வழங்குவர்.

    பல்வேறு விழாக்கள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. அவற்றில் வேனில் விழாவும், புனலாட்டு விழாவும் முக்கியமானவை.

    நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
    மலிபுனல் நிகர்தரும் தீநீர் விழவிற்
    பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை (பாடல் 8).

    (மண்டும் = கலக்கும்; தீநீர் விழவு = இனிய நீர்விளையாட்டு; வேனில் = வேனில்விழா)

    என்று ஐந்தாம் பத்தில் பரணர் கூறுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:19:07(இந்திய நேரம்)