நம்மாழ்வார் இறைவனாலேயே நம்
ஆழ்வார் என்று
அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் அருளிய
பாசுரங்கள் வேதத்தின் சாரம் எனப்
புகழப்பட்டது.
வேதம் செய்த மாறன் என்ற பெயரும்
இவருக்கு
ஏற்பட்டது. இவர் பாடிய பாசுரங்களின்
பெருமை
இப்பாடத்தில் பேசப்படுகிறது.
மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரையே தெய்வமாக எண்ணிப்
போற்றியவர். அவரைத்தவிர வேறு தெய்வமில்லையென,
திருமாலைப் பாடாமல் திருமால்
அடியவராகிய
நம்மாழ்வாரைப் பாடி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக
எண்ணிப் போற்றப்பட்டவர்.
திருமங்கையாழ்வார் பாடிய ஆறு
நூல்களைப் பற்றி
விரிவாகப் பேசுகிறது இப்பாடம். சிறிய திருமடல். பெரிய
திருமடல் என எழுதி மடல்
இலக்கியத்திற்கு
முன்னோடியாக அமைந்த பெருமைக்கு
உரியவர்
திருமங்கையாழ்வார்.
திருமங்கை அருளிய பிரபந்தங்களில் உள்ள
இலக்கிய
வகைகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.
நாயக நாயகி பாவத்தில் தோய்ந்த திருமங்கை நாயகியின்
புலப்பாட்டு உத்தியையும், கவிபாடும் திறனையும்
உணர்ந்து, பக்தி இலக்கியத்தின் தனித்தன்மையை
அடையாளம் காணலாம்.