Primary tabs
- 1.0 பாட முன்னுரை
பக்தி இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதற்கு முன் தோன்றிய இலக்கியப் பதிவுகளை அறிதல் அவசியம். அது போலப் பக்தி இலக்கியத்தின் செழுமையை உணர்ந்து கொள்ள, பக்தி இலக்கியத்திற்குப் பின் வந்த இலக்கியங்களைப் பற்றி அறிவதும் இன்றியமையாதது. ஆக, பக்தி இலக்கியத்தைச் சரியாகப் படிக்க வேண்டும் எனில் அவ்விலக்கியங்களை முன்னும் பின்னுமாக நோக்குதல் பொருத்தம் ஆகும்.
இப்பாடத்தில் வைணவ சமயப் பக்தி இயக்கத்திற்கு முன் தோன்றிய பழந்தமிழ் இலக்கியப் பதிவுகளைக் காண்போம்.