தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225mn.htm-[Back]

E

பாடம் - 5

P20225 நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

நம்மாழ்வார் இறைவனாலேயே நம் ஆழ்வார் என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் அருளிய சுரங்கள் வேதத்தின் சாரம் எனப் புகழப்பட்டது. வேதம் செய்த மாறன் என்ற பெயரும் இவருக்கு ஏற்பட்டது. இவர் பாடிய பாசுரங்களின் பெருமை இப்பாடத்தில் பேசப்படுகிறது.

மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரையே தெய்வமாக எண்ணிப் போற்றியவர். அவரைத் தவிர வேறு தெய்வமில்லையென, திருமாலைப் பாடாமல் திருமால் அடியவராகிய நம்மாழ்வாரைப் பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக எண்ணிப் போற்றப்பட்டவர்.

திருமங்கையாழ்வார் பாடிய ஆறு நூல்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இப்பாடம். சிறிய திருமடல், பெரிய திருமடல் என எழுதி மடல் இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்த பெருமைக்கு உரியவர் திருமங்கையாழ்வார்.

இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கமாகப் பேசப்படுகின்றன.



ந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • நம்மாழ்வார் அருளிய திவ்வியப் பிரபந்தங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

  • மாறனின் பக்தி, தமிழை வளப்படுத்திய பாங்கு ஆகியவற்றைத் திருவாய்மொழிவழி அடையாளங் காணலாம்.

  • நம்மாழ்வாரைக் குருவாக ஏற்று அவரை மட்டும்பாடி அடியார்க்கு அடியார் ஆன சீடன் மதுரகவியின் பக்தியை இனங்காணலாம்.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்குரிய சிறப்பை மற்றப் பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

  • திருமங்கை அருளிய பிரபந்தங்களில் உள்ள இலக்கிய வகைகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  • நாயக நாயகி பாவத்தில் தோய்ந்த திருமங்கை நாயகியின் புலப்பாட்டு உத்தியையும், கவிபாடும் திறனையும் உணர்ந்து, பக்தி இலக்கியத்தின் தனித்தன்மையை அடையாளம் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-06-2018 18:08:58(இந்திய நேரம்)