Primary tabs
-
4 - விடை4
உவவனத்தில் உள்ள பதும பீடத்தின் சிறப்பு யாது?
பதுமபீடத்தில் அரும்புகளை வைத்தால் அவை மலரும். மலர்ந்தவை ஆண்டுபல ஆயினும் வாடா. அவற்றில் வண்டுகளும் மொய்க்கா. காணிக்கை செலுத்துதலை மேற்கொண்டு ஏதேனும் ஒரு தெய்வத்தை மனத்திலே நினைத்து அப்பீடத்தில் மலரை இட்டால், அம்மலர் அவர் கருதிய தெய்வத்தின் அடியைச் சென்றடையும். ஒரு நினைப்பும் இன்றி மலரிட்டால், அது எங்கும் செல்லாது அங்கேயே இருக்கும்.


