Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
நெருக்கடிக் கால அதிகாரம் உடைய இந்திய இதழியல் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? விளக்குக.
1931ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி இதழ்களும் அச்சகங்களும் பத்தாயிரம் ரூபாய் பிணையத்தொகை கட்டவேண்டும். இத்தொகையை மாநில அரசுகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். இச்சட்டம் காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது.