தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரக்கும் சொற்கள்

  • 4.8 இரக்கும் சொற்கள்


    ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து
    பெறக் கேட்பதாக அமைந்த சொற்களாகும்.

    என்பது, தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த
    நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும்
    சொல்லாகும்.

    (எ-டு) அப்பா, எனக்கு இப்பொருளை ஈவாயாக.

    தா என்பது, தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப்
    பயன்படுத்தும் சொல்லாகும்.

    (எ-டு) நண்பா உன் புத்தகத்தைத் தா.

    கொடு என்பது, உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும்
    தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும்
    சொல்லாகும்.

    (எ-டு) மகனே, எனக்குத் தண்ணீர் கொடு.

    இவ்வாறு தகுதி அறிந்து ஈ, தா, கொடு என்னும் சொற்களைப் பயன்படுத்துவது மரபு.


    ஈதா கொடுஎனும் மூன்றும் முறையே
    இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை
                (நன்னூல் - 407)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:18:26(இந்திய நேரம்)