தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 4.9 தொகுப்புரை

        மரபு என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது.
    தொடர்களில் இடம்பெறும், உணவு முதலிய
    தொகைச் சொற்கள் பெறவேண்டிய வினைச் சொற்களையும்,
    எழுத்து மாறாச் சொற்களையும், இரக்கும் சொற்களையும்
    மரபாகப் பயன்படுத்தும் முறையை இப்பாடம் உணர்த்துகிறது.

        ஒரு சொல் பல பொருள், அறியாப் பொருள்,
    இயலாப் பொருள் ஆகியவற்றை அறிஞர் எவ்வாறு
    பயன்படுத்துகின்றனர் என்பதை அறிவிக்கிறது.

        ஒரு தொடரில் இடம் பெறும் இயற்பெயர், சிறப்புப் பெயர்
    ஆகியவற்றையும், ஒரு பொருள் குறித்த பல பெயர்களையும்,
    மூவகைப் பெயர்களையும் பயன்படுத்தும் மரபை உணர்த்கிறது.

    இவற்றோடு இரட்டைக் கிளவி, அடைமொழி ஆகியன
    தொடர்களில் பயன்படும் மரபையும் அறிவிக்கிறது.
    1)

    ஒருபொருள் குறித்த பல பெயர்களை எவ்வாறு முடித்தல் வேண்டும்?

    2)
    ஒரு பொருள் குறித்த பல பெயர்களுக்கு ஒரே வினையை எப்போது பயன்படுத்தலாம்?
    3)
    இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் சொற்றொடர்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
    4)
    சிறப்புப் பெயர்கள் எவற்றின் அடிப்படையில் அமையும்?
    5)
    மூவகைச் சொற்கள் யாவை?
    6)
    விரவுப் பெயர் என்றால் என்ன?
    7)
    இரட்டைக் கிளவி என்றால் என்ன?
    8)
    அறியாப் பொருள் என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:18:31(இந்திய நேரம்)