Primary tabs
-
2. தலைவி தலைவன் மீது ஊடல் கொள்வதற்கு உரிய
ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி விளக்குக.தலைவன் தலைவியைப் பார்த்துப் பிறரது காதலை விட தங்கள்
காதல் உயர்ந்தது என்று தலைவன் கூறினான். உடனே தலைவி,
‘யாரைவிட யாரைவிட’ என்று வினவிவிட்டு ஊடல் கொள்கிறாள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? தலைவன், தன்னைத் தவிர பிற
யாரையும் மனத்தால் கூட எண்ணக்கூடாது என்ற தன் எண்ணத்தை
இதன் மூலம் தலைவி வெளிப்படுத்துகிறாள்.