Primary tabs
-
A03125: சான்றாண்மை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சான்றாண்மை பற்றி வள்ளுவர் கூறுவதை எடுத்துரைக்கிறது.
சான்றோனாக வாழ இன்றியமையாத ஐந்து பண்புகளைப்
பட்டியலிடுகிறது. அத்தகைய பண்புக்கு அடிப்படையாக
விளங்குவது அன்பு என்று சுட்டுகிறது. நாணம் என்ற பண்பை
உயிரினும் மலோக மதித்ததைக் காட்டுகிறது. பலன்
எதிர்பாராத உதவியே ஒப்பற்றது என்று உணர வைக்கிறது.
சான்றோரின் பண்பை எடுத்துக் காட்டுடன் விவரிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?- அன்பு
உள்ளம் கொண்டவர்கள் எவ்வாறு நண்பர்களாக
அமைகின்றனர் என்பதனைப் பற்றிய செய்திகளை அறிந்து
கொள்ளலாம். - அன்புடையார்களின்
பொது நல உணர்வினையும் புரிந்து
கொள்ளலாம். - சான்றாண்மை
உடையோர்க்கு நாணம் என்பது மிகவும்
முக்கியமான ஒரு பண்பு. தமது நாணத்தைக்
காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரைக்கூடத் துச்சமாகக்
கருதுவார்கள். எனவே உயிரைவிட நாணமே உயர்ந்தது
என்பதனைச் சான்றாண்மை உடையார்களின் மூலமாக
அறிந்து கொள்ளலாம். - சான்றாண்மை
படைத்தோர், எந்தவிதமான மறு உதவியும்
எதிர்பாராமல் உதவும் மனப்பான்மை உடையவர்கள்
என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். - கண்ணோட்டம்
என்னும் சான்றாண்மை உடையோர்,
நண்பர் நஞ்சைக் கொடுத்தாலும், உண்பார்கள். எனவே,
நட்பு என்பது எவ்வளவு புனிதமானது, எத்தகைய
நம்பிக்கைக்கு உரியது என்பனவற்றை உணர்ந்து கொள்ள
முடியும்.
- அன்பு
உள்ளம் கொண்டவர்கள் எவ்வாறு நண்பர்களாக