தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.6-தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை


        அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும்
    ஐந்தையும் சான்றாண்மைப் பண்புகளாக வள்ளுவர் வரையறை
    செய்கிறார். இப்பாடத்தில், அன்பு பிறரிடம் விருப்பம் கொண்டு
    நட்பு கொள்ளச் செய்யும். அன்பு உள்ளம் கொண்ட சான்றோர்கள்
    தங்கள் உடலுக்குப் பாதுகாப்பாக உள்ள எலும்பைக் கூடப்
    பிறருக்குக் கொடுத்துவிடுவார்கள். நாணம் எனும் அணியை உடைய
    சான்றோர்கள் நாணத்தக்க எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்.
    அவ்வாறு செய்வதைத் தமக்கு ஏற்படும் பிணியாகக் கருதுவார்கள்.
    மேலும் தமது நாணத்தைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரைக்
    கூடத் துச்சமாகக் கருதுவார்கள். சான்றாண்மை உடையோர் மறு
    உதவியை எதிர்பார்க்காமல், இரக்கம் காட்டும் இயல்பு
    கொண்டவர்கள். இத்தகையோர், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தால்
    கூட மறுக்காமல் உண்பார்கள். சான்றோர்கள் பொய்யாமையைப்
    பின்பற்றுவார்கள். எனவே உலகத்தில் உள்ளோர் உள்ளத்தில்
    எல்லாம் நிலைத்து வாழ்வார்கள். மேற்குறிப்பிட்டவைகளைச்
    சான்றோர்க்கு உரிய சான்றாண்மைப் பண்புகளாக வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : II

    1. இசைக்கும் பாடலுக்கும் உள்ள தொடர்பை
      வள்ளுவர் எவற்றோடு ஒப்பிடுகிறார்? ஏன்?
    1. நயத்தக்க நாகரிகமுடைய சான்றோர் எத்தகைய
      தன்மை உடையவர்களாக இருப்பார்கள்?
    1. பொய் சொல்லலாம் என்பதற்குரிய சூழ்நிலையாக
      வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
    1. எத்தகையோர் உலகத்திலுள்ளோர் உள்ளங்களில்
      வாழ்வார்கள்?
    1. உண்மையான விளக்கு என்று வள்ளுவர் எதைக்
      குறிப்பிடுகின்றார்? ஏன்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:19(இந்திய நேரம்)