Primary tabs
-
3. குவளை மலரை விட பெண்ணின் கண்கள் எந்த வகையில்
சிறந்தவை?பெண்ணின் கண்கள் போன்று அழகு வாய்ந்தவை குவளை மலர்கள்.
ஆனால், அவை பார்க்கும் திறன் இல்லாதவை. உண்மையில்
குவளை மலர்களுக்குப் பார்க்கும் திறன் இருந்தால், அவை
தலைவியின் கண்களைப் பார்த்து இவளது கண் அழகுக்கு நாம்
ஒப்பாக மாட்டோம் என்று வெட்கப்பட்டுத் தலை குனியும். எனவே,
குவளை மலர்களை விட, பெண்ணின் கண்கள் சிறந்தவை ஆகும்.