Primary tabs
-
2. கண்ணுக்கு மை தீட்டுவதைத் தலைவி ஏன் நிறுத்தினாள்?
தன் தலைவன் கண்ணினுள் நிறைந்துள்ளான். கண்ணில் மை
தீட்டும்பொழுது, அது கண்ணில் விழாமல் இருக்க வேண்டும்,
அதற்காகக் கண்ணை மூடவேண்டும். ஆனால், கண்ணை மூடினால்
கண்ணுள் நிறைந்துள்ள தலைவன், கண்ணை மூடுகின்ற அந்த ஒரு
கணமும் மறைந்து விடுவாரே என்று தலைவி அஞ்சுகிறாள். எனவே,
தன் கண்ணுக்கு மை தீட்டுவதையே தலைவி நிறுத்திவிட்டாள்.