Primary tabs
-
4. தலைவனைப் பார்க்காத போது அவள் மனநிலை எவ்வாறு
இருந்தது? பார்த்த பொழுது என்ன மாற்றம் ஏற்பட்டது?தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். அவன்
சொன்னபடி குறித்தநேரத்தில் வரவில்லை. அதனால் கோபம்
கொண்டாள் தலைவி. ஆனால், அதே தலைவி, தலைவனை நேரில்
பார்த்தபொழுது அந்தக் கோபத்தை மறந்துவிட்டாள். ஏனெனில்,
அவனை நேரில் பார்த்த மகிழ்ச்சியால் அவன் முன்பு கொண்டிருந்த
கோபங்களை எல்லாம் மறந்துவிட்டாள் தலைவி. கோபத்துடன்
இருந்த அவள் முகம் தலைவனைப் பார்த்த பின்னர், மகிழ்ச்சியுடன்
காணப்பட்டது.