Primary tabs
-
3. தலைவியின் உள் அன்பு எவ்வாறு மலரின் மணத்துடன்
ஒப்பிடப்படுகிறது?தலைவி, தன் விருப்பத்தை, தன் உள் உணர்வுகளை
வெளிப்படையாகப் புலப்படுத்தவில்லை. அது எவ்வாறு என்றால்,
மலரின் மொட்டுக்குள் பொருந்தியிருக்கும் மணம் வெளியில்
புலப்படாது, மொட்டு மலர்ந்தபின்னரே வெளிப்படும். அதைப்போல
தலைவியின் உள் உணர்வுகள் புறத்தில் புலப்படாது. தலைவியின்
செய்கையின் மூலமே வெளிப்படும்.