Primary tabs
-
4. தலைவன் மீது தலைவி ஐயம் கொள்ளுவதற்குரிய காரணம்
யாது?பொதுவாக யாராவது ஒருவர் நம்மை நினைத்தால்தான் தும்மல்
வரும் என்பது ஒரு நம்பிக்கை. அதைப்போல், பிறர் தும்மிய
உடனே, ‘நீடு வாழ்க’ என வாழ்த்துவதும் ஒரு மரபாக இருந்து
வருகிறது.தலைவன் தும்முகிறான். முதலில் மரபுப்படி ‘நீடு வாழ்க’ என்று
தலைவனை வாழ்த்துகிறாள். பிறகு உடனே, ‘யாரோ ஒருவரை
நினைத்துத்தான் நீங்கள் தும்முகிறீர்கள்’ என்று தலைவன் மீது
ஐயம் கொள்கிறாள் தலைவி.