தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. தும்மல் தலைவனுக்கு எத்தகைய துன்பத்தைக் கொடுத்தது?

    தலைவன் முதலில் தும்மியபொழுது யாரையோ நினைத்துள்ளீர்கள்
    அல்லது யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று கூறுகிறாள்
    தலைவி.

    தும்மல் வந்தால் தன்மீது ஐயம் கொள்கிறாளே என்று அஞ்சிய
    தலைவன் தனக்கு வந்த தும்மலை அடக்குகிறான். அப்பொழுது
    தலைவி சந்தேகம் கொண்டு, ‘என்னிடம் மறைப்பதற்காகத்தான் வந்த
    தும்மலையும் மறைக்கின்றீர்கள’் என்று மீண்டும் ஊடல் கொள்கிறாள்.
    இவ்வாறு வெளிப்பட்டாலும், வெளிப்படாமல் தடைபண்ணினாலும்
    துன்பம் கொடுத்தது தலைவனுக்கு வந்த தும்மல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:53:41(இந்திய நேரம்)