Primary tabs
-
பாடம் - 2
A06122 பல்லவர் கால ஓவியங்களும்
சிற்பங்களும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பல்லவரின் குடைவரைக் கோயில்கள், கட்டட வகைக்
கற்சிற்பங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல் இரதங்கள்,
கட்டுமானக் கோயில்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள
சிற்பங்கள் பற்றியும், பல்லவர் கால ஓவியங்கள் பற்றியும்
விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத் தமிழகத்தில் இருந்த சிற்ப,
ஓவியக் கலைகள் பற்றிய இலக்கியச் சான்றுகளை அறியலாம்.
- நடுகல் பற்றிய செய்திகளை அறியலாம்.
- தமிழகத்தில் முதன் முதலாகப் பாறையைக் குடைந்து
இறைவனுக்குக் கோயில் எழுப்பிய மகேந்திர வர்மன்
காலத்தைச் சேர்ந்த சிற்ப, ஓவியங்களை அறியலாம்.
- மாமல்லையில் நரசிம்ம பல்லவன் எழுப்பிய கட்டட
வகைச் சிற்பங்கள் என அழைக்கப்படும் ஒற்றைக்கல்
இரதங்களில் இடம் பெறும் சிற்பங்கள் பற்றித்
தெளியலாம்.
- இராச சிம்மன் முதல் முதலாகக் கற்களை வைத்துக்
கட்டிய கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களைப்
பற்றியும் அவன் கால ஓவியங்கள் பற்றியும் தெரிந்து
கொள்ளலாம்.
- பல்லவர் காலத்துச் சிற்பக் கலையின் பொதுவான
இயல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத் தமிழகத்தில் இருந்த சிற்ப,
ஓவியக் கலைகள் பற்றிய இலக்கியச் சான்றுகளை அறியலாம்.