தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

    பல்லவர்கள் தமிழகக் கலை வரலாற்றின் தொடக்கக்
    காலத்தவராக இருப்பினும் தமக்கென்றே ஒரு தனி மரபைத்
    தோற்றுவித்துச் சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்லவர்களுக்கு
    அடுத்தடுத்துத் தோன்றிய அரச மரபினர், பல்லவரது கோயில்
    கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் சிற்சில மாற்றங்கள்
    செய்து தத்தமது கலை மரபைப் போற்றினர். எனவே
    பல்லவர்களே தமிழகக் கலை வரலாற்றுக்கு வித்திட்டவர்கள்
    எனலாம்.

    பல்லவர் காலத்தில் ஓவியக் கலையும் சிறப்புற்று இருந்தது
    என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. எனினும் காலத்தின்
    கோலத்தால் பெரும்பான்மையான ஓவியங்கள் அழிந்துவிட்டன.
    பல்லவர் கால ஓவியக் கலை பாண்டியர், சோழர் ஓவியக் கலை
    வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

    1.
    பரமேசுவர விஷ்ணுக் கிரஹம் என்றழைக்கப்படும் கோயில் எது? எங்குள்ளது?
    2.
    அஷ்டாங்க விமானத்தில் எத்தனைக் கருவறைகள் இடம்
    பெறும்? ஏன்?
    3.
    பல்லவர் ஓவியங்கள் எங்கெங்குக் கிடைத்துள்ளன?
    4.
    ‘சித்திரகாரப் புலி’ என்பது எந்த மன்னனது சிறப்புப்
    பெயர்?
    5.
    சோமாஸ்கந்தர் ஓவியம் பற்றிக் கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:39:13(இந்திய நேரம்)