Primary tabs
உ
கணபதி துணை
விநாயகக் கடவுள் வணக்கம்
தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூஉங்
களிறுவளர் பெருங்கா டாயினு
மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே.
குரவர் வணக்கம்
இமிழ்பெரும் பாற்கட லெழுமமு தனதீந்
தமிழ்கெழு நிலத்தினோர் தவத்தனி யுருவாய்
யாழ்ப்பாண மெனுநாட் டெழில்பெறு நல்லைத்
தனிநகர்த் தோன்றித் தமிழ்த்தொன் மொழிக்குஞ்
சைவ சமயந் தனக்குமோ ரரணாய்க்
காவலர் பாவலர் கணித்துநன் கேத்தப்
பலநூ றெளிவுகொளப் பதித்து மாக்கியு
முரைமணி பிறக்குமோ ருயரா கரமாய்ச்
சொன்மழை யெனப்பொழி வன்மையிற் சிறந்தும்
பெருநீர் வைப்பிடை யிரும்புகழ் நிறீஇய
ஆறு முகப்பெரு நாவலன் றனக்கு
நன்மரு மகனா யின்புறத் தோன்றித்
தொல்காப் பியமுந் தொகைநூ லாதியும்
பல்காப் பியமும் பயின்று மேம்படீஇ
வித்துவ சிரோமணி யாகி விளங்கிய
பொன்னம் பலப்பெயர் மன்னுசெம் மற்கு
மாரிய மொடுதமிழ்ச் சீரிய மொழிகளிற்
பேரியற் கலையும் பிறவுநன் குணருபு
பலநூ லியற்றி யிலகுபுக ழுறீஇய
சுன்னைக் குமார சுவாமிப் புலவனாம்
வித்துவ மணிக்கும் விருப்பொடு மெமக்கினி
தருந்தமி ழுணர்த்திப் பொருந்துமறி வளித்த
விருஞ்செய லதன்பொருட் டீண்டுபெருந் துதிதனை
அன்பொடுஞ் செய்திங் கின்புறு குவனே.