தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

vii

பொருளதிகாரத்துப் பின் நான்கியற்குமுள்ள இப்பேராசிரியருரையை, நச்சினார்க்கினியராலெழுதப்பட்ட முன்னியல்களினுரையோடுஞ் சேர்த்து முதலில் அச்சிட்டுதவினவர்கள், யாழ்ப்பாணம்--ராவ்பகதூர் ஸ்ரீமான் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களே. அவர்கள் தாம் அச்சிட்டபோது முழுவுரையையும் நச்சினார்க்கினியருரையென்றே கருதி, அச்சிட்ட புத்தகத்தின் முகப்பில், பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரையென எழுதி வெளியிட்டார்கள். அங்ஙனம் அவர்கள் எழுதி வெளியிட்டதற்குக் காரணம், இது பேராசிரியருரையெனத் தெரித்தெழுதாத பிரதிகள் கிடைப்ப, அவற்றைமாத்திரம் நோக்கி அச்சிட்டமையேபோலும். சிதலரித்தும் பாணந்தின்றும் எழுதுவோராற் பிறழ்வுற்றுங் கிடந்த ஏட்டுப்பிரதிகளை நோக்கி ஒருவாறு திருத்தி முதலில் அச்சிட்டுப் பாதுகாத்துதவிய பிள்ளையவர்களுடைய அரிய நன்றி தமிழுலகத்தாரால் என்றும் பாராட்டப்படத்தக்கதேயாம்.

பிள்ளையவர்களால் அச்சிடப்பட்ட இப் பொருளதிகாரம் வெளிவந்த சில காலத்தின்பின் “அப்பொருளதிகாரத்தின் பின் நான்கியல்களினுரையும் நச்சினார்க்கினியருரையன்று பேராசிரியருரையே” எனத் தக்க காரணங்களாற் றெரித்துச் சேது சம்ஸ்தான மகாவித்துவானும், சிறந்த ஆராய்ச்சியாளருமாகிய பாஷாகவிசேகரர் ஸ்ரீமத் ரா. ராகவையங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தினின்று வெளிவரும் செந்தமிழ்ப் பத்திரிகையிலும், அச்சங்கத்துப் பிரசுரமாகிய, தொல். செய்யுளியல் -- நச்சினார்க்கினியருரை முகவுரையிலும் எழுதி வெளிப்படுத்தினார்கள்.

பொருளதிகாரத்து முன்னைய வைந்தியல்களுக்குமுள்ள நச்சினார்க்கினியருரையையும், பின் நான்கியல்களுக்குமுள்ள இப்பேராசிரியருரையையும் ஏட்டுப் பிரதிகளோடும் ஒப்பு நோக்கித் திருத்தி இரண்டாவதாக, ராவ்பஹதூர் ஸ்ரீமான் ச. பவானந்தம் பிள்ளையவர்கள் வெவ்வேறாகப் பதித்து வெளிப்படுத்தினார்கள். அவர்கள் பதிப்பானும் அவ்வுரைகள் சில திருத்தமடைந்தன. அதன்பின் மூன்றாவதாக, அவ்வுரைகளிரண்டனையும் முறையே, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதிப் பதிப்பாசிரியர் ராவ்சாஹிப், ஸ்ரீமாந் S.வையாபுரிப்பிள்ளை(B.A., B.L.,)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 19:08:20(இந்திய நேரம்)