Primary tabs
குறிப்பும் விளக்கமு நெறிப்பட வமைத்துப்
பேரா சிரியப் பெருநா வலன்றன்
உரைதனைத் தெளிவுற வுணர்த்துமோ ருரைதனை
பொன்னிலங் காபுரிப் பொற்கொடி தனாது
சென்னியி லணிந்த திருமணி முடிபோல்
மன்னுயாழ்ப் பாண வளநக ரதனில்
நன்னா வலர்புகழ் புன்னாலைக் கட்டுவன்
கடவுட் கற்பிற் காசிபன் மரபு
புடவியில் விளக்கப் புகுந்த புதுமதி;
முந்நூல் மந்திர முதுமறை யாளன்;
சிந்நயக் குரிசில் செய்த மாதவம்;
நாவலர் பெருமான் நயந்திடு மருமான்
தத்துவ நெறியறி வித்துவ சிரோமணி
பொன்னம் பலப்பெயர்ப் புண்ணிய னிடத்தும்
மன்னிய வளம்பெறு சுன்னைமா நகரான்
மறுவறு குமார சுவாமியென் றோதும்
வரமுறு புலவன் மாட்டும் பெறுமிறை
தொன்னூற் கல்வித் துறையெலா மொருங்கே
பன்னாட் பயின்று பழகிய பண்டிதன்;
நலத்தகு சைவ நன்னூற் பாற்கடல்;
புண்ணிய நீறு சண்ணித்த மேனியன்
அண்ணலைந் தெழுத்து மெண்ணுநன் னாவினன்;
முன்னவன் சேவடி மன்னிய வுளத்தன்;
அற்புத நாமத் தருந்தவ; னதனைக்
கடும்போ ரேதுவிற் காகிதம் முட்டி
இடும்பைமீக் கூர விரங்குமிந் நாளிற்
கண்கவர் வனப்பு மெண்பெறு சிறப்பும்