Primary tabs
பெற்றியே யுருவா யுற்றிடு புதல்வன்;
செந்தமி ழிலக்கணச் செழுங்கடன் முகந்து
தண்டமிழ் வாணர் தமதுளப் புலமெலாங்
மணங்கமழ் தெய்வத் திளநலந் திகழுங்
கந்தழி சான்ற விந்துமத நிலைஇய
அமலமுதற் படியாம் விமலவாழ் வருளும்
விக்கின விநாயகன் மெய்ப்பத நாளும்
இத்தலம் புகழு மிணையிலா வியற்றமிழ்
வித்துவ கணேச விப்பிர மணியே.
இந்நூ லுரையைமுன் னியம்புரைக் குறிப்புடன்
அழகுற வச்சி லமைத்து வழங்கும்
பொன்னைய நாம மன்னிய செம்மல்
தன்னுளங் கொண்ட தமிழ்மொழி யார்வப்
பெற்றியு மம்ம பெறலருங் குரைத்தே.
______