தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓரம்போகியார்


ஓரம்போகியார்

20. மருதம்
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
5
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
10
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்

360. மருதம்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,
5
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
10
உற்ற நின் விழுமம் உவப்பென்;
மற்றும் கூடும், மனை மடி துயிலே.
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:17:48(இந்திய நேரம்)