தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இறுகு புனம் மேய்ந்த


இறுகு புனம் மேய்ந்த

265. குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
5
பாரத்து அன்ன-ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன-
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:48:29(இந்திய நேரம்)