தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உவர் விளை உப்பின் உழா


உவர் விளை உப்பின் உழா

331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
5
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
10
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது-
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:50:00(இந்திய நேரம்)