தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உள்ளுதொறும்.....பிடி


உள்ளுதொறும்.....பிடி

107. பாலை
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
5
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்,
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
10
யானே, தோழி! நோய்ப்பாலேனே.
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:50:42(இந்திய நேரம்)