தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எம்ஊர் வாயில்


எம்ஊர் வாயில்

83. குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
5
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:51:07(இந்திய நேரம்)