தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

என் ஆவதுகொல்


என் ஆவதுகொல்

296. பாலை
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
5
ஏ கல் மீமிசை மேதக மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப, காதலர்:
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:51:37(இந்திய நேரம்)