தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐதே கம்ம இவ் உலகு


ஐதே கம்ம இவ் உலகு

240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே-
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
5
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும்,
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
10
கானம் திண்ணிய மலை போன்றிசினே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:52:01(இந்திய நேரம்)