தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வறம் கொல வீந்த


வறம் கொல வீந்த

238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
5
பருவம் செய்த கருவி மா மழை!
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
10
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:54:01(இந்திய நேரம்)