தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வான் இகுபு சொரிந்த


வான் இகுபு சொரிந்த

142. முல்லை
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
5
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே-பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
10
முல்லை சான்ற கற்பின்,
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:54:31(இந்திய நேரம்)