தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விளையாடு ஆயமொடு ஓரை


விளையாடு ஆயமொடு ஓரை

68. குறிஞ்சி
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என-
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,
5
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
10
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே.
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:56:39(இந்திய நேரம்)