தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கண்ணும் தோளும்......பழ நலம்


கண்ணும் தோளும்......பழ நலம்

219. நெய்தல்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி-தோழி!-சிறு கால்
5
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
10
தானே யானே புணர்ந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:58:27(இந்திய நேரம்)