தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல்லாக் கடுவன்


கல்லாக் கடுவன்

233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
5
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:59:09(இந்திய நேரம்)