தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழுது கால் கிளர


கழுது கால் கிளர

255. குறிஞ்சி
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
5
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!-
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல-
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
10
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:59:27(இந்திய நேரம்)