தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லிய பருவம்


சொல்லிய பருவம்

364. முல்லை
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
5
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்
வாழலென் வாழி-தோழி!-ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
10
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப,
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:04:34(இந்திய நேரம்)