தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தினை உண் கேழல்


தினை உண் கேழல்

119. குறிஞ்சி
தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
5
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
10
முயங்கல் பெறுகுவன் அல்லன்;
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:06:16(இந்திய நேரம்)