தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தோலாக் காதலர்


தோலாக் காதலர்

339. குறிஞ்சி
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
5
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
10
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:07:28(இந்திய நேரம்)