தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தோளே தொடி கொட்பு ஆனா


தோளே தொடி கொட்பு ஆனா

133. குறிஞ்சி
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று-திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
5
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று,
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!-காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
10
தோய் மடற் சில் நீர் போல,
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:07:40(இந்திய நேரம்)