தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நகுகம் வாராய்


நகுகம் வாராய்

250. மருதம்
நகுகம் வாராய்-பாண!-பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
5
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
10
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே!
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:07:53(இந்திய நேரம்)